வெள்ளி, அக்டோபர் 24, 2008

செல்லன் குலம் - வரலாறு

தமிழ்ப் பண்பாட்டின் விளைநிலமான கொங்கு நாட்டின் நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் சின்னமாக விளங்கும் கொங்கு வேளாளர் குலத்தில் ஒன்று செல்லன் குலம். செல்லன் என்ற குலமுதல்வரால் இக்குலம் பெயர் பெற்றது என்பர். செல்லம் என்பதற்கு அருமை, அன்பு, சுகம், செல்வம், அழகு, வளம், உயர்வு என்ற பல சிறப்பான பொருள்கள் உண்டு. செல்லன் குல காணிப் பாடலில் அனுமதை என்றும், அனும நகர் என்றும் சிறப்பிக்கப்படுவது அனுமன்பள்ளி. அவ்வூரே செல்லன் குலத்தாரின் முதல் காணியூராகும்.

கீழ்க்கரைப் பூந்துறை நாட்டில் இருப்புலி என்ற பழம்பெரும் ஊர் உள்ளது. இருப்புலியில் செல்லன் குலத்தை சேர்ந்த புகழ்வாய்ந்த இளையாக் கவுண்டர் என்பவர் வாழ்ந்து வந்தார். பெரும் வள்ளல். இளையாக் கவுண்டருக்கு ஏழு ஆண்மக்கள் பிறந்தனர். ஏழு மக்களும் வளர்ந்து பெரியவர்கள் ஆனவுடன் வெவ்வேறு ஊர்களில் குடியேறினர். இருப்புலியில் ஒருவர் தங்கிவிட்டார் மற்றவர்கள் பருத்திப்பள்ளி, கொன்னையாறு, கோக்களை, அனுமன்பள்ளி, எழுமாத்தூர், நஞ்சை இடையாறு ஆகிய ஊர்களில் குடியேறி வாழ்ந்து வந்தனர். ஒரு தாய் மக்களான அவர்கள் ஏழு பேரும் எலுகரைச் செல்லன் குலம் என்று அழைக்கப்படுவர். அவர்கள் ஏழு பேரும் ஒன்றாகக் கூடித் திருச்செங்கோட்டில் ஒரு மடம் கட்டிச் சமய, சமுதாயப்பணிகள் செய்து வருகின்றனர்.


எழுகரைச் செல்லன் குலத்தாரில் பருத்திப்பள்ளிச் செல்லன் குலத்தார் மட்டும் கொங்கு நாட்டு வேளாள கவுண்டர் (நாட்டுக்கவுண்டர்) என்று அழைக்கப்படுகின்றனர். மற்றவர்கள் வேளாள கவுண்டர் என்று அழைக்கப்படுகின்றனர். பருத்திப்பள்ளி உட்பட ஏழு ஊர்களில் தனித்தனியாகத் தங்கள் குல தெய்வங்களுக்குக் கோயில் கட்டி சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர்.
ஏழுகரை செல்லன்குலத்தின் குல தெய்வம் மற்றும் அமைந்துள்ள இடம்:

1.அருள்மிகு அழகுநாச்சி அம்மன் - பருத்திப்பள்ளி

2.அருள்மிகு அத்தாயி அம்மன் - இருப்புலி

3.அருள்மிகு சின்ன அம்மன், பெரிய அம்மன் - அனுமன்பள்ளி

4.அருள்மிகு செல்லியம்மன் - கொன்னையாறு

5.அருள்மிகு கொன்காளியம்மன் - கோக்கலை

6.அருள்மிகு ராஜாசுவாமி, ராசாயி - நஞ்சை இடையாறு

7.அருள்மிகு பொன்காளியம்மன் - எழுமாத்தூர்


(நன்றி : கொங்கு நாட்டு வேளாளர் வரலாறு)



3 கருத்துகள்:

  1. நல்ல பதிவு தோழா.. ஒவ்வோர் குலத்துக்கும் நம்முடைய வரலாறுகளை தேடிக்கொண்டிருக்கீறேன். உங்களுடைய செல்லன் குல வரலாறு எனக்கும் உதவியாய் இருந்தது. By the way, am doing a sheet with all our kulams with tempels & place to publish to all our Kongus. Hope to get help from you too. thanks. :-)

    பதிலளிநீக்கு